திரிணமூல் காங்கிரஸை அழிப்பேன்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆவேச பேச்சு

By பிடிஐ

மேற்கு வங்கத்தில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் அழிக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சூளுரைத்துள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

எனது பெயர் அமித் ஷா, நான் பாஜகவின் மிகச் சிறிய தொண்டன். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை அழிப்பதற்காக வந் துள்ளேன். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜக சார்பில் மிகப்பெரிய இயக்கம் நடத்தப்படும். அந்த இயக்கத்தின் பெயர் ‘மம்தாவே வெளியேறு’ என்பதாகும்.

சாரதா சிட்பண்ட் ஊழலில் திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு நேரடி தொடர்பு உள்ளது. முதலில் குணால் கோஷும் அடுத்து சிரிஞ்ஜாய் போஸும் சிறைக்குச் சென்றனர். மேலும் பல்வேறு தலைவர்களிடம் விசாரணை நடைபெற்று வரு கிறது. அவர்களில் யார் சிறைக் குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி யுள்ளது.

கருப்பு பணம் குறித்து நாடாளு மன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்ப விரும்புகிறேன். சாரதா சிட்பண்ட் ஊழலில் கொள்ளையடித்த பணம், கருப்பு பணமா, வெள்ளை பணமா?

முதல்வர் மம்தா பானர்ஜியின் ஓவியங்களை வாங்கியது யார் என்பதை அவர் பகிரங்கமாக அறிவிக்க முடியுமா?

சாரதா சிட்பண்ட் முறைகேட்டில் சிக்கியுள்ள ஊழல்வாதிகளைக் காப்பாற்ற முதல்வர் மம்தா பானர்ஜி முயற்சித்து வருகிறார்

ஊடுருவல் விவகாரம்

வங்கதேசத்தில் இருந்து ஏராளமானோர் மேற்கு வங்க மாநிலத்துக்குள் ஊடுருவி வருகின்றனர். அவர்களை மேற்கு வங்க மக்களே விரும்பவில்லை. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி ஆதரவு அளிக்கிறார். வாக்குவங்கி அரசியலுக்காக அவர் இவ்வாறு செயல்படுகிறார்.

அவர் மேற்கு வங்க மக்களுக்கு முதல்வரா, அல்லது வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு முதல் வரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

பர்த்வான் விசாரணையை முடக்க முயற்சி

சாரதா சிட்பண்ட் ஊழலில் சுருட்டிய பணம் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

அந்த வகையில் வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கத்துக்குள் ஊடுருவிய 2 தீவிரவாதிகள் பர்த்வான் பகுதியில் வெடிகுண்டு தயாரித்தபோது வெடித்துச் சிதறி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசா ரணை நடத்தி வருகிறது. ஆனால் அந்த விசாரணைக்கு முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு முட்டுக் கட்டைகளை போட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமித் ஷா பொதுக்கூட்டத்துக்கு கொல்கத்தா மாநகராட்சி முதலில் அனுமதி அளிக்க மறுத்தது. இதை எதிர்த்து பாஜக சார்பில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து நேற்று பொதுக்கூட்டம் நடை பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

29 mins ago

இந்தியா

31 mins ago

சினிமா

36 mins ago

உலகம்

39 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்