மோடிக்கு பைத்தியம்; வைத்தியம் பார்க்க வேண்டும்: சரத்பவார் சர்ச்சைப் பேச்சு

By செய்திப்பிரிவு

நரேந்திர மோடி உளறிக்கொட்டுகிறார். அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் கன்ஸ் வாங்கி பகுதியில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விஜய் பாம்ளேவை ஆதரித்து சரத்பவார் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:

நரேந்திர மோடி உளறிக் கொட்டுகிறார். அவருக்கு மனநல மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் முக்த் பாரத் பற்றி மோடி பேசுகிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகம் மற்றும் பங்களிப்புப் பற்றி அவருக்குத் தெரியுமா? காங்கி ரஸின் சித்தாந்தம் காரணமாகவே நாம் சுதந்திரம் பெற்றோம்.

குஜராத் வன்முறையின் போது குல்பர்காவில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அஸன் ஜாப்ரி உள்பட சிறுபான்மைச் சமூகத்தினர் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதி ஆமதாபாதிலிருந்து 20 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது. ஆனால், மோடி அப்பகுதிக்குச் சென்று பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தைச் சந்திக்கவோ, அவர்களைப்பற்றிக் கவலைப்படவோ இல்லை.

மோடி தேசத்தின் அச்சுறுத்தல். மகாராஷ்டிரத்தில் மழை மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்குக் கவலையில்லை என்றார் பவார்.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மொரதாபாத் வேட்பாளர் ஹாஜி யகூப் தன் பிரச்சாரத்தின் போது, “காட்டுமிராண்டியான நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைவிட துரதிருஷ்டம் வேறில்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பிரிட்டிஷாரின் உளவாளிகளாகப் பணியாற்றினர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

க்ரைம்

13 mins ago

இந்தியா

9 mins ago

இந்தியா

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்