சந்திரபாபு நாயுடு மகன் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தெலங்கானா அரசு குறித்தும் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் குறித்தும் விமர்சித்ததாக தொடுக்கப்பட்ட பொது நலன் வழக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் சமீபத்தில் தெலங்கானா அரசை ரவுடிகள் ஆள்கின்றனர் என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து போய் விட்டதாகவும், முதல்வர் சந்திர சேகர ராவ் ஒரு ஹிட்லரை போன்று ஆட்சி நடத்துகிறார் என்றும் சமூக வலைதளத்தில் குறிப் பிட்டிருந்தார்.

இது குறித்து ஹைதராபாத்தை நேர்ந்த வழக்கறி ஞர்கள் ரவிகுமார், அபிலாஷ் ஆகிய இருவரும் ரங்காரெட்டி நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து எல்.பி. நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

57 mins ago

உலகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்