கொட்டித்தீர்க்கும் கனமழை; அசாமில் 8 லட்சம் பேர் பாதிப்பு: பிஹார், உ.பி.யிலும் மக்கள் தவிப்பு

By செய்திப்பிரிவு

அசாமில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேசம், பிஹார், அசாம் என வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கங்கை உட்பட முக்கிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பிஹாரிலும் மழையால் மக்கள் தவித்து வருகின்றனர். 

அசாமில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 800 கிராமங்கள் மூழ்கியுள்ளன. சுமார் நான்கு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் பிரம்மபுரத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரம்மபுத்திராவில் பாதுகாப்பு காரணங்களுக்காக படகு சேவைகள்  நிறுத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் 800க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால் சூழ்ந்துள்ளன.

 மலைப்பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. ரயில்வே தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் ரயில் போக்குவரத்தும் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுளளது.

வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காசிரங்கா உயிரியல் பூங்காவிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

இதுபோலவே மிசோரம் உட்பட மற்ற வட கிழக்கு மாநிலங்களிலும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

44 mins ago

வாழ்வியல்

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்