நான் உயிரோடுதான் இருக்கிறேனா?- காஷ்மீர் இளைஞரின் பயம்

By ஜாஹித் ரஃபீக்

"காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை கார் ஒன்று ராணுவ சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது. அதனால் அதன் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர்" - இது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான இந்திய ராணுவத்தின் அறிக்கை.

ஆனால், இந்த துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைத்து, கண்களில் இன்னும் பயம் சற்றும் விலாகமல் இருக்கும் பாஸிம் என்ற இளைஞர், ராணுவத்தின் இந்த அறிக்கையை முற்றிலுமாக மறுக்கிறார்.

'தி இந்து' ஆங்கில் நாளிதழுக்கு பாஸிம் அளித்துள்ள பேட்டியில், "ராணுவம் சொல்வதுபோல் நாங்கள் ராணுவ சோதனைச் சாவடிகளில் நிற்காமல் செல்லவில்லை.

எங்கள் கார் சென்ற பகுதியில் ஓரிடத்தில் ராணுவத்தினர் சிலர் நின்றிருந்தனர். அவர்கள், காரை நிறுத்தச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது எங்களுக்கு கேட்கவில்லை. அதனாலேயே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது" என்றார்.

பாஸிம் மேலும் கூறுகையில், "இந்த நொடிப்பொழுதுகூட அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. மூன்று நாட்களாக என்னை கனவிலும் பின் தொடர்கிறது அந்தச் சம்பவம். நான் உயிருடன் இருக்கிறேன்... என்னுடன் வந்த இருவர் இறந்துவிட்டனர்... இது எதுவுமே என்னால் நம்ப முடியவில்லை.

ராணுவத்தினர் சொல்வது போல் நாங்கள் சென்ற வழியில் மூன்று சோதனைச் சாவடிகள் இல்லை. ஒரு தெரு ஓரத்தில் ராணுவத்தினர் சிலர் இருந்தனர். எங்கள் வாகனத்தை நிறுத்துமாறு விசிலடித்தனர். ஆனால், காரை ஓட்டிக்கொண்டிருந்த பாசிலுக்கு விசில் சத்தம் கேட்கவில்லை. சிறிது நேரத்திற்கு முன்னர் எங்கள் கார் ஒரு டிப்பர் லாரியுடன் லேசாக மோதியிருந்தது.

பைசல் அந்த அதிர்ச்சியிலிருந்து விலாகமல் இருந்தார். காரை நிறுத்துமாறு நாங்கள் கூறினோம். அந்த நொடியில் துப்பாக்கி தோட்டாக்கள் பாயத் தொடங்கின. முதல் குண்டு பைசல் கையில் பாய்ந்தது. பைசல் (அம்மா) என்று அலறினான். கார் பைசல் கட்டுப்பாட்டில் இருந்து விலகி மின் கம்பத்தில் மோதியது. பைசல் தொடர்து தாக்குதலுக்கு உள்ளானான். மெஹரஜுதீன் மீது மூன்று தோட்டக்கள் தைத்தன. என் மீதும் ராணுவ வீரர்கள் சுட்டனர்.

ஆனால், நான் ஓடினே. ஒரு வழியாக தப்பித்து அருகில் இருந்த ஒரு வீட்டுக்குள் சென்றேன். அவர்கள் எனக்கு தண்ணீரும், ரூ.10-ம் கொடுத்தனர். அதை வைத்துக் கொண்டு என் வீடு வந்தடைந்தேன். அப்போது வீட்டில் அழுகைச் சத்தம் கேட்டது. ராணுவ துப்பாக்கிச் சூட்டில் நானும் இறந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு என் வீட்டார் அழுதுக் கொண்டிருந்தனர். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூன்று நாட்களாகியும் பாஸிம் தன் வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஆனால், எப்படியாவது பைசல் அம்மாவை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என தவித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில்:பாரதி ஆனந்த்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

3 hours ago

மேலும்