தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை போர்கால அடிப்படையில் மத்தியஅரசு தீர்க்க வேண்டும்: மக்களவையில் நவாஸ்கனி வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை போர்கால அடிப்படையில் மத்திய அரசு தீர்க்க வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்.பிகே.நவாஸ் கனி மக்களவையில் வலியுறுத்தினார்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொகுதியின் எம்.பியான நவாஸ் கனி நேற்று மக்களவையில் தமிழில் பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது ஆனால் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது

இந்த பிரச்சனையை தீர்க்க தமிழக அரசுக்கு மத்திய அரசு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க உடனடியாக போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மாநில அரசுக்கு உரிய நெறிமுறைகளை வழங்கி மக்களின் துயரை தீர்க்க வேண்டும்

வீடுதோறும் நீர் எனும் திட்டம் 2024 ஆம் ஆண்டுக்குள் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, ஐந்து ஆண்டு கழித்து கிடைக்கப்போகும் வாய்ப்பாக இருக்கும். இப்போது தண்ணீர் இன்றி தவிக்கும் மக்களின் நிலையை கவனிப்பது அவசரமான தேவை ஆகும்

மீனவர் நலத்திட்டங்கள் இல்லை

பிரதமர் மீனவர் நலத்திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது ஆனால் இத்திட்டத்தின் மூலமாக என்னென்ன நலத்திட்டங்கள் வரப் போகின்றன என்ற விரிவான விபரங்கள் ஏதும் சொல்லப்படவில்லை.

ஜிபிஎஸ் கருவி

மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி படகுகள், ஆயுள்காப்பீடு, உடல்நலம், கடலில்ர் காணாமல் போனால் கண்டுபிடிக்க ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய மீன்பிடி படகுகள் போன்றவற்றை வழங்குதல் தொடர்பான அம்சங்கள் ஏதும் இத்திட்டத்தின் கீழ் வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

வீட்டுவசதி

இத்திட்டத்தின் விரிவான விவரங்களை தெளிவாக வரையறுத்து விட வேண்டும் மீனவர்களுக்கு மானிய விலையில் வீடு கட்டும் வசதிகளை செய்து தரப்படுமா என்பதையும் விளக்க வேண்டும்.

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட வேண்டும்

மீன்பிடி உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்ய வேண்டும் என்பது முக்கியமாக கோரிக்கை. ஆனால் இது முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. கெரசின் மற்றும் டீசலுக்கான மானியம் தொடர்பான மீனவர்களின் கோரிக்கைகளும் எந்தவித பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாது வருத்தத்தை அளிக்கிறது

பேரிடர் நிதிப்பயனாளி

மீனவர்கள் இயல்பாகவே புயல் வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்படும் பணியில் இருப்பவர்கள்  எனவே அவர்களை தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதிப் பயனாளிகளாக அறிவிக்க வேண்டும் மீனவர்களின் ஒரு கோரிக்கையை கூட இந்த பட்ஜெட் குறிப்பிடாதது கவலை அளிக்கக் கூடியதாகும் 

சிறுபான்மையினர் பாதுகாப்பு

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனால் அவர்களுக்கான பாதுகாப்புக்காக எந்த ஏற்பாட்டையும் இந்த அரசு செய்யவே இல்லை.

முஸ்லிம் பெண்களுக்கான திட்டங்கள்

முஸ்லிம் பெண்களின் கல்வி மேம்பாட்டு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கி தரவேண்டும். ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் திரும்பப் பெறப்பட்டு விட்டது இந்த நிதியை முஸ்லிம் மகளிர் கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டுகிறேன்.

ராமாயண இதிகாச நிகழ்வு

ராமேஸ்வரம் என் தொகுதிக்குள் தான் வருகிறது இது தொடர்பாக கடந்த ஜூலை 2 ஆம் தேதி சுற்றுலா அமைச்சகம் ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது ராமாயண இதிகாசத்தில் நிகழ்வு வட்டமானது பல்வேறு புனிதத் தலங்களைப் பற்றி பேசுகிறது. இதில் ராமேஸ்வரமும் இணக்கம். ஆனால் நிதி அமைச்சர் இதைப் பற்றி பேசாததுடன், நிதியையும் ஒதுக்க வில்லை.

புண்ணியத்தலம் ரயில்கள்

ராமேஸ்வரத்திற்கு லட்சக்கணக்கான  பக்தர்கள் வந்து போய்க் கொண்டு இருக்கின்ற காரணத்தால் ராமநாதபுரம் ராமேஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களை நவீனப் படுத்த வேண்டும். ராமேஸ்வரத்துடன் புண்ணிய ஸ்தலங்களை இணைக்கும் ரயில்களை ஏற்பாடு செய்து தரவேண்டும்.

 நிதிகுறைப்பு

பட்டியலினத்தவர் மலைவாழ் மக்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் ஆகியோரின் நலனுக்கான நிதியானது 40 சதவிகிதம் குறைக்கப்பட்டு விட்டது கடந்த ஆண்டு ரூ.150.03 கோடி நிதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாண்டு இந்த நிதியானது ரூ.90 கோடியாக சுருக்கப்பட்டு விட்டது 

ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்

இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் மக்களுக்கு எதிரான பட்ஜெட் எதிரான பட்ஜெட் நடுத்தர மக்களுக்கு எதிரான பட்ஜெட் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் அதிபர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடியது என்றால் அரசுக்கு ஏழைகள் முக்கியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்