உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பலத்த பாதுகாப்புடன் பேரவைத் தலைவர் முன்பு கர்நாடக அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஆஜர்: பரபரப்பான சூழலில் இன்று சட்டப்பேரவை கூடுகிறது

By இரா.வினோத்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கர்நாடக அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் பலத்த பாதுகாப்புடன் நேற்று மாலை சட்டப்பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் முன்பு ஆஜராகி, ராஜினாமா செய்த தற்கான விளக்கத்தை அளித்தனர். இந் நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் மஜத - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களில் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். குமாரசாமி அரசுக்கு ஆதரவு அளித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவை திரும்ப பெற்றதால் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் பாஜகவினர், அதிருப்தி எம்எல்ஏ-க்களை தனி விமானம் மூலம் மும் பைக்கு அழைத்து சென்று, சொகுசு விடுதி யில் பாதுகாப்புடன் தங்க வைத்தனர்.

இதனிடையே, 8 எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்கள் முறைப்படி சமர்ப் பிக்கப்படாததால் நிராகரிக்கப்படுவதாக வும் மற்ற கடிதங்கள் மீது முடிவெடுக்க சற்று கால அவகாசம் தேவை என்றும் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் அறிவித்தார். இதை எதிர்த்து அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

6 மணிக்குள் ஆஜராக உத்தரவு

இந்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ''பேரவைத் தலைவர் வேண்டுமென்றே எம்எல்ஏ-க்கள் சிலரின் ராஜினாமா கடிதங்களை நிராகரித்துள்ளார். அரசியல் உள்நோக்கத்தோடு இந்த விவகாரத்தில் கால தாமதம் செய்கிறார். கால சூழலை கருத்தில் கொண்டு எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “வியாழக்கிழமை (நேற்று) மாலை 6 மணிக்குள் அதிருப்தி எம்எல்ஏ-க் கள் பேரவை தலைவர் முன்பு ஆஜராகி ராஜினாமா செய்ததற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். ராஜினாமா கடிதங்கள் மீது பேரவைத் தலைவர் இன்றே முடி வெடுக்க வேண்டும். பெங்களூரு செல்லும் எம்எல்ஏ-க்களுக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பை கர்நாடக அரசு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

உத்தரவிட முடியாது

இதை எதிர்த்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சார்பில் உடனடியாக மேல் முறையீடு செய்யப்பட்டது. அப்போது ஆஜ ரான காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக் கறிஞருமான அபிஷேக் சிங்வி, “பேரவைத் தலைவர் அரசியல் சாசனப்படி ராஜினாமா கடிதங்களை அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுக்க முடியும். இதில் திட்டமிட்ட கால தாமதம் எதுவுமில்லை. பேரவைத் தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது. எனவே உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், பேரவைத் தலைவரின் மேல் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்தது. இதனிடையே இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

பறந்து வந்த எம்எல்ஏ-க்கள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மும்பையில் முகாமிட்டிருந்த அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் 11 பேர் தனி விமானம் மூலம் நேற்று பிற்பகல் பெங்களூரு விரைந்தனர். மாலை 5.30 மணிக்கு பழைய விமான நிலையத்தை வந்தடைந்த எம்எல்ஏக்கள் 6 மணிக்குள் பேரவைத் தலைவரை சந்திக்க ஏதுவாக ‘ஜீரோ டிராபிக்’ போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காங்கிரஸ், மஜத-வினரால் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில், பெங்களூரு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அவர்களை சட்டப்பேர வைக்கு அழைத்து வந்தனர். முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பேரவை வளாகத்தைச் சுற்றி 1 கி.மீ. பரப்பளவுக்கு வரும் 14-ம் தேதி வரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு மாலை 6 மணியுடன் முடிவடைவதால் அதிருப்தி எம்எல்ஏக்கள் பைரத்தி பசவராஜ், சோமசேகர், முனி ரத்னா உள்ளிட்டோர் அவசர அவசரமாக ஓடி வந்து பேரவைத் தலைவர் அலுவல கத்துக்குள் நுழைந்தனர்.

அப்போது பாஜக எம்எல்ஏ-க்கள் சோமண்ணா, ரேணுகாச்சாரியா உள்ளிட் டோரும் பேரவைத் தலைவர் அலுவலகத் துக்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பாஜக வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரில் ஆஜரான அதிருப்தி காங் கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் 11 பேரிடம் பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் சுமார் 1 மணிநேரம் விளக்கம் கேட்டறிந்தார்.

தாமதமாக முடிவெடுக்கவில்லை

இதையடுத்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் கூறும்போது, “எம்எல்ஏ-க்கள் ராஜினாமா விவகாரத்தில் நான் கால தாமதமாக முடிவெடுக்கவில்லை.

ராஜினாமா கடிதம் அளித்து 3 வேலை நாட்கள் மட்டுமே கடந்த நிலையில், கால தாமதம் செய்துவிட்டதாக குற்றம்சாட்டுவது வேதனையாக இருக்கிறது. உலகமே அழிவதைப் போலவும், நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டதை போலவும் பதறு கிறார்கள். நான் தற்போது நிகழும் எல்லா அரசியலுக்கும் அப்பாற்பட்டவன். அரசியல் சாசனப்படியே எனது முடிவை எடுப்பேன்.

தற்போது எம்எல்ஏ-க்கள் அளித்த தன்னிலை விளக்கம் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோ பதிவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகிறேன்.

ஏற்கெனவே அறிவித்தபடி வெள்ளிக் கிழமை (இன்று) கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கும். நான் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன். என் மனசாட்சிப்படியே இந்த விவகாரத்தில் முடிவெடுப்பேன்” என்றார்.

ராஜினாமா செய்ய முடியாது

முதல்வர் குமாரசாமி முன்னாள் பிரதமரும், மஜத தேசிய தலைவருமான தேவகவுடா, காங்கிரஸ் மூத்தத் தலைவர் கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார் ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், பரமேஷ்வர், டி.கே.சிவகுமார் உள்ளிட் டோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ நான் ஏன் பதவி விலக வேண்டும்? பதவி விலக வேண்டிய அவசியம் என்ன? இப்போது பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. எனது தலைமையிலான கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எங்களது ஆட்சி நிச்சயம் கவிழாது. ஜனநாயகத்துக்கு எதிரான பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்