ஐஎஸ்.,ஸில் இணைந்த கேரள இளைஞர் பலி

By விஜைதா சிங்

ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த முகமத் மர்வான் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு காணாமல்போன கேரள இளைஞர்கள் 20 பேர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் இணைந்துள்ளதாக சந்தேகிக்கப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்தது.

மேலும் தேசிய புலனாய்வு மையம் வெளியிட்ட குற்றப் பத்திரிகையில், காணாமல் போனவர்கள் ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர்களில் மூன்று பேர் ஏற்கனவே ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்த நிலையில், மற்றுமொரு கேரள இளைஞரும் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் அமைப்புடன் இணைந்ததாக சந்தேகிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த 20 இளைஞர்களில் ஒருவரான முகமத் மர்வான் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக குறிஞ்செய்தி அவரது தந்தைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

திங்கட்கிழமை காலை முகமத் மர்வான்னின் தந்தைக்கு அஷ்ஃப்க் மஜித் என்பர் மர்வான் சில நாட்களுக்கு முன் கொல்லப்பட்டார் என்ற தகவலை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக கேரளாவிலிருந்து ஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெஸ்டின் வின்செண்ட், முகமத் ஹஃபிசூதின், முர்ஷித் முகமத் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்