மாநிலங்களவை எம்.பி.க்களாக அமித் ஷா, ஸ்மிருதி பதவியேற்பு

By செய்திப்பிரிவு

மாநிலங்களவை எம்.பி.க்களாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அலுவலத்தில் நேற்று இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு வெங்கய்யா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமித் ஷா இந்தியிலும் ஸ்மிருதி இரானி சமஸ்கிருதத்திலும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், ரவிசங்கர் பிரசாத் மற்றும் பலர் பங்கேற்றனர். பதவியேற்ற பிறகு தனது மனைவியுடன் பாஜக மூத்த தலைவர் அத்வானி வீட்டுக்கு அமித் ஷா சென்றார். இருவரும் அத்வானியிடம் ஆசிப் பெற்றதாக கட்சி தலைவர்கள் கூறினர். பாஜக தலைவர் அமித் ஷா மாநிலங்களவை எம்.பி.யானதன் மூலம் முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

9 mins ago

தமிழகம்

40 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்