ஜார்க்கண்ட் சிறையைப் பார்வையிட்ட தமிழக பயிற்சி நீதிபதிகள்

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரி பாக்கில் உள்ள சிறைச்சாலைகளை, தமிழகத்தில் இருந்து வந்த பயிற்சி நீதிபதிகள் குழு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை பார்வை யிட்டது.

தமிழக பயிற்சி நீதிபதிகள் குழுவில், எம்.கே.அனந்த நாராயணன், ஜி.பன்னீர் செல்வம், எஸ்.முத்து மஹாராஜன், என்.சாதிக் பாஷா, எஸ்.தங்கமணி, அனித்ரா ஆனந்த், சி.விஜய் கார்த்திக், ஹெச்.முகம்மது அன்சாரி மற்றும் என்.காமராஜ் உட்பட 33 பேர் இருந்தனர். இவர்கள், முதல்நாள் ஹசாரிபாக்கில் உள்ள ஜெ.பி.சிறைச்சாலையையும், மறுநாள் அதன் அருகிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலையையும் பார்வையிட்டனர்.

ராஞ்சியில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது ஹசாரிபாக். நம் நாட்டின் மிகவும் பழமையான சிறைகளில் ஒன்றான இதில், சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசத் தந்தை மகாத்மா காந்தி, டாக்டர்.ராஜேந்திர பிரசாத் உட்பட பல முக்கியத் தலைவர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

திறந்தவெளி சிறை

பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மிசா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவரான ஜெயப்பிரகாஷ் நாராயண், இங்கிருந்து தப்பி ஓடிய சிறை இது.

முட்டை வடிவில் இருக்கும் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பாது காப்பு கொண்ட சிறை, பெண்கள் சிறைப் பகுதி ஆகிய வற்றையும் அதன் செயல்பாடுகளையும் நீதிபதிகள் பார்வையிட்டனர்.நக்சலைட்டுகளுக்காக அமைக் கப்பட்ட திறந்தவெளிச் சிறைச் யையும் இக்குழு பார்வையிட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சிறை அதிகாரிகள் கூறும்போது, “ பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இருந்து வந்த பயிற்சிக் குழு இது. இவர்கள் நீதிபதியாக பணியாற்றும்போது, சிறைகளைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். அதன்படி நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய சிறைச் சாலைகளை பயிற்சி நீதிபதிகள் குழு பார்வையிடுவது வழக்கம்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்