வன்முறையைக் கையாள்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது: மம்தா பானர்ஜி

By ஐஏஎன்எஸ்

வன்முறைகளைக் கையாள்வதில் பாஜக ஆளும் மாநிலம், பாஜக ஆளாத மாநிலம் என்று மத்திய அரசு வேறுபாடு  பார்கிறது என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் ஹரியாணா மாநிலம், சிர்ஸாவில் உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை சம்பங்களில் 38 பேர் பலியாகினர்.

வன்முறையைக் கையாள்வதில்  மத்திய அரசு வேறுபாடு காண்கிறது என்று மம்தா பானர்ஜி கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறும்போது, பாஜக மேற்கு வங்கத்தில் ராம் ரஹிம் கலவரத்தை ஏற்படுத்த நினைத்தது. பாஜக எப்போதும் இந்து மற்றும் முஸ்லிம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறது.

பஞ்ச்குலாவில் ராம் ரஹிமின் தண்டனைக்காக 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

டார்ஜிலிங்கில் கலவரம் ஏற்பட்டால் குறைந்த அளவில் ராணுவத்தை அனுப்பும் மத்திய அரசு, பஞ்ச்குலாவில் கலவரம் ஏற்பட்டபோது அதிக அளவில் ராணுவத்தை அனுப்பியது.

பாஜக ஆளும்  மாநிலத்துக்கு பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலத்துக்கு இடையே நிறையே வேறுபாடுகளை மத்திய அரசு காட்டுக்கிறது. இப்படிதான் மத்திய அரசு செய்லபடுகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

52 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

21 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

மேலும்