ஷீனா போராவை இந்திராணி கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஓட்டுநர் வாக்குமூலம்

By செய்திப்பிரிவு

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது தாய் இந்திராணி முகர்ஜி தனது மகளின் முகத்தில் அமர்ந்து கொண்டு அவரைக் கழுத்தைக் நெரித்துக் கொன்றதாக, ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மும்பைச் சேர்ந்த தொழிலதிபரான பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி முகர்ஜி. இவரது மகளான ஷீனா போராவைக் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்திராணி முகர்ஜி மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கைதான அவரது கார் ஓட்டுனர் ஷியாம் ராவிடம் மும்பை சிபிஐ நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது அவர், ‘இந்திராணி முகர்ஜி ஷீனா போராவின் முகத்தில் அமர்ந்து கொண்டு அவரைக் கழுத்தைக் நெரித்துக் கொன்றதாக’ வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே, பைகுல்லா சிறையில் உயிரிழந்த சக பெண் கைதி மஞ்சுளாவின் மரணம் தொடர்பாக இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்தப்படும் என, மகாராஷ்டிர மாநில அமைச்சர் ரஞ்சித் பாட்டீல் தெரிவித்தார். மேலும் மஞ்சுளா இயற்கை மரணம் அடையவில்லை என அறிக்கை சமர்ப்பித்த ஜேஜே மருத்துவமனை மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

6 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்