மிரட்டல் விடுத்தாலும் கடும் தண்டனை: விமான கடத்தல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க சட்டம் - 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது

By பிடிஐ

விமான கடத்தலின்போது யாரேனும் ஒருவர் உயிரிழந் தாலும், கைதான குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய விமான கடத்தல் தடுப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. கடத்தல் குற்றத்துக்கான தண்டனைகளைப் புதிய சட்டம் கடுமையாக்கியுள்ளது. இது தொடர்பான அறிவிக்கையை கடந்த 5-ம் தேதி அரசு முறைப்படி வெளியிட்டது.

விமான கடத்தலில் ஈடுபடு வோரைத் தண்டிக்கும் விதமாக 1982-ல் சட்டம் கொண்டு வரப் பட்டது. இந்த சட்டம் பலவீனமாக இருப்பதாக நாடாளுமன்றம் கருதியதால் கடத்தல் குற்ற விதிமுறைகளை விரிவுபடுத்தி புதிய சட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது.

பணயமாக பிடிக்கப்படு வர்கள் மட்டுமின்றி விமானத்தில் பாதுகாப்புப் பணியில் இருப்ப வரோ, விமான நிலைய ஊழியரோ அல்லது பயணியோ யார் உயிரிழந்தாலும், கைதான குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் புதிய சட்டம் கடந்த 2016-ல் கொண்டு வரப்பட்டது.

இந்தச் சட்டம் 5-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளி யிட்டுள்ளது. பழைய சட்டத் தின்படி விமானத்தைக் கடத்தும் கடத்தல்காரர்களுக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் புதிய சட்டத்தின்படி விமானத்தைக் கடத்துபவர்கள் மட்டுமின்றி, கடத்தப் போவதாக மிரட்டல் விடுப்பவர்கள், கடத்த முயற்சிப்பவர்களுக்கும் கடும் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

தவிர நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமானத் தைக் கடத்த சதித் திட்டம் தீட்டியவர்களும் விமானத்தைக் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்படும்.

இந்த புதிய சட்ட மசோதா கடந்த ஆண்டு மே மாதம் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்