சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: ராணுவ தளபதி அறிவுரை

By பிடிஐ

நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்கு எத்தகைய சவால்களையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுஹாக் தெரிவித்துள்ளார்.

புனே அருகே உள்ள கதக்வஸ்லா என்ற இடத்தில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில் (என்டிஏ) பயிற்சியை முடித்த 355 இளம் வீரர்கள் நேற்று அணிவகுப்பு நடத்தினர். இதைப் பார்வையிட்ட பின்னர் சுஹாக் கூறியதாவது:

சமீப காலமாக நமது அண்டை நாடு எல்லையில் அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். எல்லையில் அமைதியை உறுதிப்படுத்துவதற்காக தயார் நிலையில் இருப்பதே சரியான வழி. நமது இறையாண்மைக்கு ஊறு விளைக்கும் வகையில் யாரேனும் அத்து மீறி தாக்குதல் நடத்தினால் அதை முறியடித்து நமது வலிமையை பறைசாற்ற வேண்டும்.

முப்படைகளின் எதிர்கால தலைவர்களான நீங்கள், உள்நாட்டு பிரச்சினை, இயற்கைப் பேரிடர் உள்பட எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இதில் உங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி போராட வேண்டும் என தல்பீர் சிங் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்