சேது திட்டத்துக்கு மாற்றுப் பாதையை அரசு ஆராய்ந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

By செய்திப்பிரிவு

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "ராமர் பாலத்தை விடுத்து, சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

முதற்படியாக, ரயில் இந்தியா தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவைகள் (ரைட்ஸ்) அமைப்பு மாற்றுப் பாதையில் சேது திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பதை ஆய்வு செய்து தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அமைப்பின் பரிந்துரை தமிழக அரசின் ஒப்புதலை பெற வேண்டியிருக்கிறது. பாம்பன் பாதை, தமிழக அரசின் எல்லைக் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியமாகிறது" என பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்