காஷ்மீர் துப்பாக்கிச் சூடு சம்பவ அறிக்கை தாக்கல்: கார் தடுமாறியதால் செக்போஸ்டில் நிற்கவில்லை

By செய்திப்பிரிவு

காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, கார் ஒன்று ராணுவ சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது. அதனால் அதன் மீது ராணுவத் தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இருவர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில், அந்த கார் நிலைதடுமாறியதே சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற தற்குக் காரணம் என்று தெரியவந் துள்ளது. மாவட்ட ஆடசியர், பட்காம் காவல் துறையின் உயர் அதிகாரி ஆகியோர் இதுதொடர் பான அறிக்கையைமாநில அரசுக் கும் தேர்தல் ஆணையத்துக்கும் சமர்ப்பித்துள்ளனர்.

இதற்கிடையே, ராணுவம் கூறுவது போல சம்பவ இடத்தில் மூன்று சோதனைச் சாவடிகள் இருக்கவில்லை மாறாக ஒன்று தான் இருந்தது என்றும், தங் களைக் கொடுமைப்படுத்தத் தோதான இடமாக அதை ராணு வம் கருதுகிறது என்றும் உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதே இடத்தில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ராணுவ வீரர்கள் தவறுதலாகச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிக்கை கோரும் உள்துறை

இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது உள்துறை அமைச்சகம். மேலும் அந்தச் சம்பவம் நடந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகள் குறித்தும் விளக்கம் கேட்டுள்ளது அமைச்சகம்.

மனித உரிமை ஆணையம்

இதற்கிடையே, ஹுரியத் கூட்டமைப்பு இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையகத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு பாதுகாப்புத் துறை அமைச் சகத்துக்கும், பட்காம் காவல்துறைக்கும் மனித உரிமை ஆணையகம் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ராணுவம் ஏற்கெனவே விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

"ஏற்கெனவே வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் சூழலைச் சீர்கெடுக்கும் விதமாக இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன" என்று காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப் துல்லா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்