உத்தரபிரதேசத்தில் ஓடும் ரயிலில் முஸ்லிம் குடும்பம் மீது தாக்குதல்: நகைகளுடன் கும்பல் ஓட்டம்

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் ஓடும் ரயிலில், முஸ்லிம் குடும்பத்தினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் 10 பேர், உறவினரின் திருமண நிகழ்ச்சி யில் பங்கேற்று விட்டு கடந்த புதன் கிழமை ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இளைஞர்கள் சிலர் அவர்கள் இருந்த பெட்டிக்குள் புகுந்துள்ள னர். பின்னர் குடும்பத்தினரை தடியால் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

பெண்களிடம் இருந்த நகை களை இளைஞர்கள் கொள்ளை அடித்துள்ளனர். மாற்றுத் திறனாளி குழந்தையையும் அந்த இளைஞர் கள் அடித்துள்ளனர். குடும்பத்தினர் 8 பேர் காயங்களுடன் மேற்கு உத்தரபிரதேசத்தின் பரூக்காபாத் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆனால், யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் தெரியவில்லை.

எனினும், மாற்றுத் திறனாளி குழந்தையிடம் இருந்து செல் போனை, இளைஞர் ஒருவர் பறிக்க முயன்றுள்ளார். அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி உள்ளது என்று போலீஸார் தெரிவித் துள்ளனர். ஆனால், பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞர் ஒருவரை குடும்பத்தினர் அடித்துள் ளனர். ஆத்திரம் அடைந்த அவர் நண்பர்களை போனில் அழைத்துள் ளார். அடுத்த ரயில் நிலையத்தில் அவர்கள் குடும்பலாக ரயில் பெட்டியில் ஏறி குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இன் னொரு தகவல் வெளியாகி உள்ளது.

‘‘கும்பல் தகராறு செய்ய தொடங்கியதும் அவசர எண் 100-ஐ தொடர்பு கொண்டோம். அது வேலை செய்யாததால் போலீஸாரால் சரியான நேரத்துக்கு வரமுடியவில்லை’’ என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்தச் சம்பவம் உ.பி.யில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

மேலும்