நோய் எதிர்ப்பு, சர்க்கரை நோய்க்கான மருந்து விலை 35% வரை குறையும்

By செய்திப்பிரிவு

நோய் எதிர்ப்பு மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்து விலையை, தேசிய பார்மாசூட்டிக்கல் விலை கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) குறைத்துள்ளது.

உயிர்க் காக்கும் மருந்து களின் விலையை, தேசிய பார்மாசூட்டிக்கல் விலை கட்டுப் பாட்டு ஆணையம் அவ்வப்போது நிர்ணயித்து வருகிறது. இந்நிலை யில், நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் சர்க்கரை நோய்க்கான மருந்துகளின் விலையை என்பிபிஏ குறைத்துள்ளது. அதன்படி, 25 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலை 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை குறையும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை சர்க்கரை நோய்க்கானவை.

‘‘இந்த மருந்து விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் (என்எல்இஎம்) உயிர்க் காக்கும் மருந்துகள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் உள்ள மருந்துகள், மக்கள் வாங்கும் அளவுக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்’’ என்று என்பிபிஏ தலைவர் பூபேந்திர சிங் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஏற்கெனவே இந்த 25 மருந்துகள் விலை கட்டுப்பாட்டில்தான் உள் ளன. தற்போது மேலும் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

அத்துடன் மொத்த விலை அட்டவணையின் மாற்றங்களுக்கு ஏற்ப ஆண்டுதோறும் மருந்துகளின் விலையை மருந்து நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்