டெல்லியில் மாடுகள் உயிரிழப்பு அதிகரிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

டெல்லியில் மாடுகளின் அவல நிலை தொடர்கிறது. இங்குள்ள நலிவடைந்த அரசு கோசலைகளில் மாடுகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

டெல்லி மாநகராட்சிகள் சார்பில் 5 கோசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பசுக்கள் மட்டுமின்றி வயதான காளைகளும் பரமாரிக்கப்படுகின்றன. இவற்றில் மொத்தம் சுமார் 24,000 மாடுகளை பாதுகாக்க வசதி செய்யப்பட்டுள் ளது. இந்த கோசாலைகள் தொடர் பாக டெல்லி மாநகராட்சிகள் தரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

தெற்கு டெல்லி மாநகராட்சியில் செயல்படும் கோசாலையில் கடந்த 2015-16-ம் ஆண்டில் 3,398 மாடுகள் பாதுகாப்பதற்காக அனுப்பப்பட்டன. இதே ஆண்டில் அந்த கோசாலையில் 3,685 மாடுகள் உயிரிழந்துள்ளன. இதற்கு முந்தைய ஆண்டான 2014-15-ல் அங்கு 2,974 மாடுகள் அனுப்பப்பட்டன. அதே ஆண்டு அந்த கோசாலையில் 2,143 மாடு கள் உயிரிழந்துள்ளன. இதே போல் கிழக்கு டெல்லி மாநகராட்சி கோசாலைக்கும் 2015-ல் ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை அனுப் பப்பட்டிருந்த 190 மாடுகளில் 120 மாடுகள் இறந்துள்ளன.

கடந்த 2011-ல் டெல்லியின் மூன்று மாநகராட்சி கோசாலை களுக்கும் சுமார் 49,000 மாடுகள் அனுப்பப்பட்ட நிலையில், அவற் றில் சுமார் 46,000 மாடுகள் இறந் துள்ளன. இந்த புள்ளிவிவரப்படி சராசரியாக டெல்லியில் அன்றாடம் 20 மாடுகள் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. மாநகராட்சி கோசாலைகளில் 24,000 மாடுகளை பாதுகாக்க வசதியிருந்தாலும் இந்த இறப்பினால் அவற்றில் தற்போது சுமார் 17,000 மாடுகளே உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லி அரசு வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இங்கு அனுப்பப் படும் மாடுகளில் பெரும்பாலா னவை காயம் அடைந்தவையாக வும் நோய்வாய்ப்பட்டவையா கவும் உள்ளன. இந்த மாடுகள் அனைத்தும் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப் பட்டு தெருக்களில் திரிந்தவை. காளைகள் மூப்பு அடைந்ததாலும் பசுக்கள் கறவை நின்றதாலும் இவ்வாறு தெருக்களில் விடப்படு கின்றன” என்று தெரிவித்தனர்.

டெல்லி அரசின் 5 கோசாலை கள் சார்பில் ‘ஹெல்ப் லைன்’ எண்களும் கொடுக்கப்பட்டுள் ளன. 1266 மற்றும் 155303 என்ற எண்களிலும் அன்றாடம் கைவிடப் பட்ட மாடுகள் குறித்த தகவல் குவிகின்றன. இவை பெரும்பாலும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் திரிபவை. இவ்வாறு வரும் அனைத்து தகவல்கள் மீதும் அரசு கோசாலைகளால் நடவடிக்கை எடுக்க முடிவ தில்லை. இதனால் இந்த மாடுகள் தனியார் கோசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.

ஒவ்வொரு மாட்டின் பரா மரிப்புக்கும் தினமும் குறைந்த பட்சம் ரூ.100 தேவைப்படுகிறது. இந்நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக மாடுகளை பராமரிக் கும் பணி சவாலாக உள்ளதாக தனியார் கோசாலைகள் தெரிவிக் கின்றன. தனியார் கோசாலைகளி லும் சிலர் பெயரளவில் நடத்தி விட்டு அதன் நிலத்தை ஆக்கிர மிக்க முயற்சிக்கின்றனர். மாடுகள் பராமரிப்புக்கு அரசு அளிக்கும் உதவித் தொகையை மாடு களுக்கு செலவிடாமல் காப்பாளர் கள் மோசடி செய்வதும் நடை பெறுகிறது. இதனால் விசாரணை என்ற பெயரில் தனியார் கோசாலைகளுக்கு நிதியுதவி அளிப்பதை டெல்லி அரசு கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

சினிமா

32 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்