சொத்துக்குவிப்பில் சசிகலாவுக்கு பெரும் பங்கு: கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா கருத்து

By இரா.வினோத்

மறைந்த தமிழக முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 2-வது குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா வுக்கு பெரும் பங்கு உள்ளது என கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, ‘தி இந்து'விடம் கூறியதாவது:

“சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மறைந்தார். ஆனால் ஜெயலலிதா வழக்கின் விசாரணை காலம் முழுவதும் உயிருடன் இருந்த தால் வழக்கின் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதே வேளை யில் வழக்கில் தொடர்புடையவர் இறந்துவிட்டால் அவரது பெயரை நீக்க வேண்டும். இதனை அரசு வழக்கறிஞர் என்ற முறையில் நான் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். இதன்படி ஜெயலலிதா வின் பெயரை வழக்கில் இருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் மனுதாக்கல் செய்வேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மட்டுமில்லாமல் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நால்வரும் குற்றம் செய்ததாலே தலா 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஜெயலலிதா பொது ஊழியராக இருந்து ஊழல் புரிந்ததாலே அவருக்கு ரூ.100 கோடி அபராதம் வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு உடந்தை யாக இருந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதிக்கப் பட்டது. இதன் மூலம் ஜெயலலிதா மட்டுமில்லாமல் சசிகலா உள்ளிட்டோருக்கும் ஊழலில் பெரும் பங்கு உள்ளது என்பதை நீதிபதி குன்ஹா உறுதியாக தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் சசிகலா உள்ளிட்டோர் ஜெயலலி தாவுடன் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டது, ஜெயலலிதாவின் பினாமியாக செயல்பட்டது, பொது ஊழியரின் பெயரைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தது ஆகியவற்றை பற்றி உறுதி யான ஆதாரங்கள் தாக்கல் செய் யப்பட்டுள்ளன. எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு நீதிமன்றம் உரிய தீர்ப்பை அளிக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்