ஆதார் எண் இல்லாத குழந்தைகளுக்கு மதிய உணவு தொடரும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

By பிடிஐ

ஆதார் அட்டை இல்லை என்பதற்காக குழந்தைகளுக்கு மதிய உணவு நிறுத்தப்படாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் இந்த விவ காரத்தை காங்கிரஸ் உறுப்பினர் மோதிலால் வோரா எழுப்பினார். அப்போது அவர், “மதிய உணவுத் திட்டத்துக்கு ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயம் ஆக்கி யுள்ளது. பள்ளிக் குழந்தை களுக்கு இலவச உணவு அளிக் கும் திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்கு முடிவு செய்து விட்டதாக தோன்றுகிறது. மதிய உணவுத் திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடி குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

இதற்கு மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளிக்கும்போது, “ஆதார் அட்டை இல்லாத குழந்தைகளுக்கு மதிய உணவு நிறுத்தப்படாது. அனைத்து குழந்தைகளுக்கும் மதிய உணவு தரப்படும். அதேநேரம் அவர் களுக்கு ஆதார் எண்ணும் தரப்படும்.

அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் ஏற்கெனவே ஆதார் எண் பெற்றுள்ளனர். எனவே தற்போது மாணவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படுகிறது. மதிய உணவு திட்டத்தில் ஆதார் இணைக்கத் தொடங்கிய பிறகு இத்திட்டத்தில் முறைகேடுகள் குறைந்துள்ளன.

ஆதார் எண் வழங்கும் வசதி ஏற்படுத்த முடியாத இடங்களில் மாணவர்களுக்கு தனித்துவ அடையாள எண்களை மாநில அரசு வழங்கும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்