திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 8 தமிழக கூலி தொழிலாளிகள் என்கவுன்ட்டர்? - விளக்கம் அளிக்க அதிகாரிகள் மறுப்பு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்த வந்த தமிழகத்தை சேர்ந்த 8 கூலி தொழிலாளர்கள் நேற்று என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து போலீஸ், வனத்துறை அதிகாரிகள் விளக்கம் கூற மறுத்து விட்டனர்.

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதி யில் கடந்த 3 நாட்களாக அதிரடிப்படை போலீஸார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நூற்றுக்கும் அதிகமான தமிழ கத்தைச் சேர்ந்த கூலி தொழி லாளர்கள் செம்மரங்களை வெட்டி கடத்துவதாக வந்த தகவலின்பேரில் மும்மரமாக அவர்களை தேடி வருகின்றனர்.

நேற்று மதியம் சேஷாசலம் வனப் பகுதியில் குமாரதாரா-பசுபுதாரா அணைக்கட்டு இருக்கும் பகுதிக்கு அருகே அடர்ந்த வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழி லாளர்களும், அதிரடிப்படை போலீஸா ருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதில் 8 பேரை போலீஸார் என்கவுன்ட்டர் செய்த தாகவும் செய்திகள் பரவின.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு தொலைக்காட்சிகள் இதுகுறித்து பரபரப்பாக செய்திகள் வெளியிட்டன. சம்பவ இடத்துக்கு செய்தியாளர்கள் சென்று தேடினர். மேலும் இது குறித்து வனத்துறை, போலீஸ் அதிகாரி களிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் வனத்துறை, காவல் துறை சார்பில் இதற்கு சரியான விளக்கம் அளிக்க மறுத்துவிட்டனர்.

போலீஸாருக்கும், கடத்தல்காரர் களுக்கும் நடந்த மோதலில் தமிழக தொழிலாளிகள் தங்களது உயிர்களை பாதுகாத்து கொள்ள அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளனர். ஆனால் இதில் 8 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. இவர்கள் உண்மையிலேயே காணவில்லையா அல்லது போலீஸாரால் என்கவுன்ட் டர் செய்யப்பட்டனரா எனத் தெரிய வில்லை. ஒருவேளை போலீஸார் இந்த அடர்ந்த வனப்பகுதியில் கூலி தொழி லாளர்களை சுட்டுக் கொன்று எங்காவது புதைத்து விட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி சேஷாசலம் வனப்பகுதில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலி தொழி லாளர்கள் ஆந்திர அதிரடிப்படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டனர். அதற்கு முன்பாக இதே போன்று 3 பேர் என்கவுன்ட்டர் செய்யப் பட்டனர். அப்போதும், மறுநாள்தான் போலீஸார் என்கவுன்ட்டர் நடந்த விஷயத்தை உறுதிப்படுத்தினர். அப்போது 20 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆந்திர அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் 8 தமிழர்களை என்கவுன்ட்டர் செய்தால் இந்த பிரச்சினை இரு மாநிலங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கும் என்பதால், இந்த விவகாரம் மூடி மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

வணிகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

கல்வி

42 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

மேலும்