பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

By செய்திப்பிரிவு

எல்லைப் பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையில் சத்தற்ற, சுவையற்ற உணவு வழங்கப்படுவதாக அந்தப் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் தேஜ் பகதூர் யாதவ் அண்மையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய அரசு ஊழியர் புரன் சந்த் ஆர்யா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி ரோஹினி, நீதிபதி சங்கீதா துங்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எல்லைப் பாதுகாப்புப் படையில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை, சசஸ்திர சீமா பால், அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட படைபிரிவுகளும் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

33 mins ago

சினிமா

43 mins ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்