மானிய விலை சிலிண்டர் ஆண்டுக்கு 12 ஆக உயரும்?

By செய்திப்பிரிவு

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரி வாயு சிலிண்டர் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 9 வீதம், மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த உச்சவரம்பை 12 ஆக உயர்த்தும்படி கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், மானிய விலை சிலிண்டர்களுக்கான உச்சவரம்பை 12 ஆக உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்திய நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வும் ஒரு காரணம் என காங்கிரஸ் முதல்வர்கள் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதையடுத்தே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும், பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 32 முக்கிய நகரங்களில் பஸ் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளைப் பொருத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

மேலும்