குஜராத்தில் ராம ராஜ்யம் நடக்கிறதா?- ஆய்வு செய்ய வந்தார் கேஜ்ரிவால்

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் குஜராத் வந்தடைந்தார். குஜராத் மாநில முழுவதும் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்போவதாகவும், மோடி கூறுவது போல் அங்கு ராம ராஜ்யம் தான் நடக்கிறதா என தான் ஆராயப்போவதாகவும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கேஜ்ரிவாலுடன் மனீஷ் சிசோதியா, சஞ்சய் சிங் ஆகியோர் வந்துள்ளனர். விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேஜ்ரிவால், குஜராத் மாநில அரசும், ஊடகங்களும், குஜராத்தில் ராம ராஜ்யம் நடப்பதாகக் கூறுகின்றனர்.

மாநிலத்தில் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் துறை பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறி வருகிறார்கள். எனவேதான், அவர்கள் சொல்வது உண்மை தானா என நேரில் பார்ப்பதற்காக குஜராத் வந்துள்ளேன், என்றார்.

விமான நிலையத்தில் கேஜ்ரிவாலை வரவேற்க காத்திருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், ஷீலா தீட்சித் தோற்றுவிட்டார், இனி மோடி தோற்றுப்போவார் என கோஷம் எழுப்பினர்.

4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கேஜ்ரிவால், கடைசி நாளன்று பாபுநகரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

மேலும்