காஷ்மீரில் ஆக. 5 வரை ஊரடங்கு: பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் வரும் 5-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந் துள்ளது.

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிர வாதி புர்ஹான் முகமது வானி (21) கடந்த ஜூலை 8-ம் தேதி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை கண்டித்து காஷ்மீர் முழுவதும் கடந்த 9-ம் தேதி கலவரம் வெடித்தது.

தெற்கு, வடக்கு காஷ்மீர் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 23-வது நாளாக நேற்றும் அங்கு சில இடங் களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இஷ்பாக் அகமது தர் (18) நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்ரீநகர், அனந்தநாக், புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத் தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. இந்தப் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டி ருப்பதாக போலீஸார் அறிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறிய போது, பிரிவினைவாத அமைப்பு கள் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன, அதன்கார ணமாக ஊரடங்கும் நீட்டிக்கப்பட் டுள்ளது என்று தெரிவித்தனர்.

எம்.பி.பி.எஸ். நுழைவுத் தேர்வு

காஷ்மீர் மாநிலத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த தேர்வு ஸ்ரீநகரில் நேற்று நடந்தது. ஏராளமானோர் தேர்வை எழுதினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவியர் நகர் வந்து செல்ல சிறப்பு வாகன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையத்தை முதல்வர் மெகபூபா முப்தி பார்வையிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்