நரேந்திர மோடிக்கு தீவிரவாதிகள் குறி: பாஜக தலைவர்கள் கவலை

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரை தீவிரவாதிகள் குறிவைத்திருப்பதாக அதன் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர் களிடம் பேசிய அதன் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘எப்போது இல்லாத வகையில் இந்தமுறை மக்களவைத் தேர்தலின்போது கைது செய்யப்படும் தீவிரவாதிகள் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. இவர்கள் அனைவரும் நரேந்திர மோடியை பிரதமராக அறிவித்ததால் அவரை குறி வைத்து கிளம்பியுள்ளனர். நாம் ஆட்சிக்கு வந்தால் இவர்களுக்கு முடிவு கட்டும் வகையில் உறுதியான நடவடிக்கை எடுப்போம்.’ எனத் தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்யும் காங்கிரஸ் தீவிரவாதிகளை ஒடுக்க எந்தவிதமான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். பிஹாரில் மாவோயிஸ்டுகள் இரு செல்போன் கோபுரங்களை வெடிவைத்து தகர்ந்தது குறித்து மத்திய மற்றும் பிஹார் மாநில அரசுகளை அவர் கண்டித்துள்ளார்.

இதுபற்றி பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான நிர்மலா சீதாராமன் கூறியதாவது: இது குறித்த செய்திகள் சில ஊடகங்களில் மட்டும் வெளியானபோது அது தவறான தகவல்கள் தருவதாக மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். இது குறித்து நாம் அவரை நேரில் சந்தித்த போதும் சுசில்குமார் ஷிண்டே பாதுகாப்பு குறைவின்மையை ஏற்கவில்லை.

ஆனால், இப்போதுபல தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிஹாருக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி செல்லவிருக்கும் நிலையில் அங்கு மாவோயிஸ்டுகள் செல்போன் கோபுரங்களை தகர்த்துள்ளனர். இது பற்றி மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பிஹாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் அரசுகள் எதுவுமே பேசுவதில்லை.

இந்த தீவிரவாதிகள் அனைவருமே பாஜகவின் பிரதமர் வேட்பாளரை குறிவைத்திருப்பது கவலை கொள்ள வைக்கிறது. இது உள்நாட்டு பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அச்சுறுத்தலாகும். எனக் கூறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 min ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

32 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

மேலும்