கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறியும் காங்கிரஸ்: அருண் ஜேட்லி தாக்கு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் கட்சி கண்ணாடி மாளிகையில் இருந்துகொண்டு கல்லெறிகிறது என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சி ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவாண், ரயில்வே லஞ்ச புகாரில் ராஜினாமா செய்த அமைச்சர் பவண் குமார் பன்சால் போன்றவர்களை வேட்பாளர்களாக அறிவித்தது டன், பிஹாரில் தண்டனை பெற்ற லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணியும் அமைத்துள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் சிபிஐயால் விசாரணை செய்யப் பட்டு வரும் முதலமைச்சர் வீர்பத்ர சிங், காங்கிரஸின் பிரச்சாரத்துக்கு தலைமை வகித்து வருகிறார்.

தீவிரவாதத்துக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை சரியாக தெரிந்து கொள்ளாத கேப்டன் அம்ரிந்தர்சிங், அமிருத சரஸ் பொற்கோயிலில் ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டுகிறார். அவர் என்னைப் பார்த்து கேள்வி கேட்பது கண்ணாடி மாளிகையில் இருந்து கல்லெறிவதைப் போன்றதா கும் என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

க்ரைம்

6 mins ago

சினிமா

21 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

44 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்