ஹைதராபாத்தில் 11 நீதிபதிகள் இடைநீக்கம்

By செய்திப்பிரிவு

நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்ட ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 11 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தையும் இரண்டாக பிரிக்கக் கோரி போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கடந்த 3-ம் தேதி, இரு மாநிலங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்து அதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக் கிழமை தெலங்கானா நீதிபதிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த உயர் நீதிமன்றம் 2 நீதிபதிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து, தெலங்கானா நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 9 நீதிபதிகள் மீது நேற்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனினும், தங்களது முடிவில் இருந்து பின்வாங்காமல் உயர் நீதிமன்றத்தின் முன் தெலங்கானா மாநில நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மேலும் சில நீதிபதிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாயக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத் உயர் நீதிமன்றம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலங்கானா நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

32 mins ago

சினிமா

31 mins ago

இந்தியா

37 mins ago

ஓடிடி களம்

55 mins ago

கருத்துப் பேழை

52 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

45 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்