ராஜ்நாத் சிங், சோனியாவுக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ்

By பிடிஐ

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலளிக்காததற் காக, ஆறு தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா காந்தி, பிரகாஷ் காரத், சரத்பவார், சுதாகர் ரெட்டி ஆகியோருக்கு நேரில் ஆஜராகும்படி மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

கடந்த 2013-ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆறு தேசிய கட்சிகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆர்.கே.ஜெயின் என்பவர், பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் நன்கொடை, நிதி, உட்கட்சித் தேர்தல் ஆகியவை குறித்து 2014 பிப்ரவரியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் கோரியிருந்தார். ஆனால், அவற் றுக்கு பதில் அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே. ஜெயின் மேல்முறையீடு செய்தார்.

அப்போது சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிட்டு மட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மற்ற கட்சிகளுக்கு கட்சித் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவல் ஆணையத்தின் பதிவாளர் மீது ஆர்.கே.ஜெயின் குற்றம்சாட்டி னார்.

இதைத்தொடர்ந்து, ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா, சரத் பவார், பிரகாஷ் காரத், சுதாகர் ரெட்டி ஆகியோர் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராகும்படி மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

1 min ago

வாழ்வியல்

2 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

26 mins ago

சுற்றுச்சூழல்

36 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்