யாசின் பத்கல் மீதான வழக்கில் நவ. 29-ல் நீதிமன்ற விவாதம்

By செய்திப்பிரிவு

இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பத்கல் மற்றும் அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பான வழக்கறிஞர்கள் விவாதம் வரும் 29-ம் தேதி நடைபெறும் என்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு மாவட்ட நீதிபதி ஐ.எஸ்.மேத்தாவிடம் இருந்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது முன்னிலையில், குற்றச் சாட்டுகள் பதிவு தொடர்பாக விவாதம் மீண்டும் நடைபெறு கிறது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 20 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகை, என்ஐஏ சார்பில் நீதிமன்றத்தில் இதற்கு முன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2013-ல் சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைவர்களை குறித்து வைத்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தினர்.

இதுபோன்று வியூகம் வகுக்கு மாறு இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பாகிஸ்தான் நிறுவனர் ரியாஸ் பத்கல் பரிந்துரை அளித்தாக கூடுதல் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

யாசின் பத்கல், அவரது நெருங்கிய உதவியாளர் அசதுல்லா அக்தர் என்கிற ஹட்டி ஆகிய இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் 2013 ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப் பட்டனர். இருவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். இவர்கள் இருவர் உள்பட இந்தியன் முஜாகிதீன் அமைப் பைச் சேர்ந்த 9 பேர் மீது சிஐஏ 2 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

ஓடிடி களம்

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்