காஷ்மீர் பிரச்சினையை அரசியல் ரீதியாக அணுகலாம்: உச்ச நீதிமன்றம் கருத்து

By பிடிஐ

ஜம்மு-காஷ்மீர் தேசிய கருஞ் சிறுத்தை கட்சி தலைவரும், வழக்கறிஞருமான பீம் சிங், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காஷ்மீர் பிரச்சினைக்கு பல்வேறு நிவாரணங்களைக் கோரியிருந்த பீம்சிங், காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த கோரியிருந்தார்.

இம்மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏஎம் கான்வில்கர், டிஒய் சந்திரசூட் ஆகியோரடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், “இப்பிரச் சினை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. எனவே, இதனை அரசியல் ரீதியாகவே அணுக வேண்டும். தவிர, எல்லாவற்றையும் நீதித்துறை அளவுகோள்களின் அடிப்படையிலேயே கையாள முடியாது” எனத் தெரிவித்தனர்.

மேலும், காஷ்மீர் எதிர்க்கட்சிகள் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் பிரதமர் மோடியைச் சந்திக்கும்போது அக்குழுவின ருடன் பீம் சிங்கையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி சொலிசிட்டர் ஜெனரலைக் கேட்டுக் கொண்டனர்.அப்போது, “ஆர்எஸ்எஸ் சர்வாதி கார அரசு தன்னை அழைக்க வில்லை” என பீம் சிங் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இங்கு அரசியல் பேசக்கூடாது. நீங்கள் பிரதமரைச் சந்திக்க விரும்பு கிறீர்களா இல்லையா” எனக் கேட்டு, சொலிசிட்டர் ஜெனரலிடம் உரிய ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

49 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்