கார்த்தி சிதம்பரம், 2 பேர் மீது அமலாக்கப்பிரிவு விசாரணை

By தேவேஷ் கே.பாண்டே

ஸிகிடிசா ஹெல்த் கேர் நிறுவனத்தின் ரூ.11.57 கோடி பெறுமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதோடு, இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கார்த்தி சிதம்பரத்தையும் விசாரணை செய்தது.

இந்தச் சொத்துக்கள் இந்நிறுவன இயக்குநர்கள் ஸ்வேதா மங்கல், ரவி கிருஷ்ணா ஆகியோருடையது.

ராஜஸ்தான் ஆம்புலன்ஸ் ஊழல் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

நிதிமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரம், ஸ்வேதா மங்கல், ரவிகிருஷ்ணா ஆகியோர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அதாவது சிபிஐ பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ராஜஸ்தானில் சுமார் 100 ஆம்புலன்ஸ்கள் இயங்கிக்கொண்டிருப்பதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்து வருவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து 2015 அக்டோபரில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பாக உள்ள பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இணைப்பிதழ்கள்

11 hours ago

க்ரைம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்