விஷம் பாய்ச்சுகிறார் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By ஐஏஎன்எஸ்

உத்தரப் பிரதேசத்தின் தியோரியா நகரில் இருந்து டெல்லி வரை ராகுல் காந்தி கிசான் யாத்திரை மேற்கொண்டுள்ளார். கதம்பூர் என்ற இடத்தில் நேற்று விவசாயி கள் மத்தியில் ராகுல் பேசும்போது, “சமூகத்தில் பிரதமர் மோடி விஷம் பாய்ச்சுகிறார். இந்திய மக்கள் ஒருவருக்கொருவர் மோதலில் ஈடுபடச் செய்கிறார். விவசாயிகளின் வலியும் பிரச் சினைகளும் பிரதமரை சென்றடை யாதது துரதிருஷ்டவசமானது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

உத்தரப் பிரதேச மாநில மக்களுக்காக பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பாஜக ஆகிய கட்சிகள் எதுவும் செய்யவில்லை. இக்கட்சிகள் சார்பில் அமைந்த அரசுகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தன.

இந்த மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல காங்கிரஸ் விரும்புகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

மாவட்டங்கள்

8 mins ago

உலகம்

13 mins ago

தமிழகம்

18 mins ago

தொழில்நுட்பம்

43 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மாவட்டங்கள்

2 hours ago

மேலும்