தமிழகத்தின் எதிர்ப்பை மீறி காவிரியில் 2 அணை கட்டுவது எப்படி?- கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை

By இரா.வினோத்

தமிழக அரசின் எதிர்ப்பை மீறி காவிரி ஆற்றின் குறுக்கே 2 புதிய அணைகளை கட்டுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் நேற்று முன்தினம் கூறும்போது, “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் 48 டிஎம்சி நீரை தேக்கும் அளவுக்கு புதிதாக 2 அணைகள் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது” என்றார்.

கர்நாடக அரசின் இந்த முடிவு காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரானது. இந்த திட்டம் நிறைவேறினால் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய நீர் சரியாக கிடைக்காது. ஆதலால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அமைச்சரவைக் கூட்டம்

இந்நிலையில், நேற்று மாலை பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டினார். இதில் நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெய சந்திரா உள்ளிட்ட அமைச்சர் களும், நீர்வளத்துறை அதிகாரி களும், சட்டத்துறை நிபுணர்களும் கலந்து கொண்டனர்.

சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத் தில், புதிய அணைகள் கட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இது கூட்டுக் குடிநீர்த்திட்டம் என்பதால் மத்திய அரசின் நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது குறித்தும் பேசப்பட்டது.

மத்திய அரசின் ஒப்புதலை பெற மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, அனந்தகுமார், சதானந்த கவுடா உதவியை நாடலாம் என முடிவெடுக்கப்பட்டது.

தமிழக அரசின் எதிர்ப்பை உச்ச நீதிமன்றத்திலும், காவிரி நடுவர் மன்றத்திலும் சட்டபூர்வமாக எதிர்க்கொள்ள வேண்டும். எக் காரணம் கொண்டும் இத் திட்டத்தை கைவிடக் கூடாது என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலிடம் கேட்டபோது, “க‌ர்நாடக அமைச்சரவையில் எடுக் கப்பட்ட முடிவு குறித்து,விரைவில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கிறோம். இந்த திட்டம் காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் எதிரானது அல்ல. இதனை தமிழக அரசு எதிர்ப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

13 mins ago

இந்தியா

52 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்