ரூ.900 கோடியில் கோதாவரியில் புனித நீராடும் விழா

By செய்திப்பிரிவு

கோதாவரி நதியில் புனித நீராடும் விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ரூ.900 கோடி செலவில் நடத்தப்படும் என்று ஆந்திர இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் மாணிக்கியால ராவ் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

நாட்டில் உள்ள 12 புகழ்பெற்ற நதிகளில், சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நதியில் புனித நீராடும் விழா நடத்துவது இந்துக்களின் ஐதீகம்.

இதையொட்டி கோதாவரி நதியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புனித நீராடும் விழா அடுத்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜூலை 14-ம் தேதி காலை 6.26 மணிக்கு மகா ஆரத்தியுடன் இந்த விழா தொடங்க உள்ளது.

நாடு முழுவதிலும் இருந்து பல லட்ச கணக்கான மக்கள் பங் கேற்கும் இந்த விழாவுக்கு ரூ. 900 கோடி செலவிட திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ. 600 கோடி நிதி உதவி செய்ய உள்ளது. இதையொட்டி கோதாவரி மாவட்டத்தில் உள்ள 327 கோயில்களில் மராமத்துப் பணிகள் செய்யப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

18 mins ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்