ரயில் நிலையத்தை தத்தெடுக்குமாறு அமைச்சர் அறிவுரை

By பிடிஐ

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே துறை அதிகாரிகள், தலா ஒரு ரயில் நிலையத்தை தத்தெடுத்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, ரயில்வே வாரிய தலைவருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ள தாவது: தூய்மை இந்தியா திட்டத் தின் கீழ் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் தூய்மையை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரயில்வே துறையில் பணி யாற்றும் அதிகாரிகள், தங்களின் பொறுப்பில் தலா ஒரு ரயில் நிலையத்தை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ரயில் நிலையங்களில் தூய்மைப் பணிகளை மேற்பார்வையிட்டு, தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

நடைமேடைகளில் சமைப் பதற்கு அனுமதியளிக்கக் கூடாது. உணவுகளை விற்கும் கடை களையும் நடைமேடையி லிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நாடு முழுவதும் 7,500 ரயில் நிலையங்கள் உள்ளன. இவற்றில் அதிக ரயில்கள் வந்து செல்லும், மிகவும் மோசமான நிலையில் இருக்கும் 700 ரயில் நிலையங்களை அடையாளம் கண்டுள்ளோம்.

இந்த 700 ரயில் நிலையங் களையும் அதிகாரிகள் தத் தெடுத்து, தூய்மைப் பணி களை அடுத்த மாதத்திலிருந்து மேற்கொள்ளவுள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

23 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

31 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

37 mins ago

ஆன்மிகம்

47 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

மேலும்