உனா தலித் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல் காந்தி: ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

By ஐஏஎன்எஸ்

குஜராத் மாநிலம், உனா நகரில் இறந்த பசுவின் தோலை உரித்ததாக கூறி தாக்கப்பட்ட தலித் இளைஞர்களின் குடும்பத்தினரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார்.

குஜராத்தின் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா நகரில் பசுவின் தோலை உரித்ததாக கூறி, தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் கடந்த 11-ம் தேதி கட்டி வைத்து கொடூரமாக தாக்கியது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து குஜராத்தில் கடந்த சில நாட்களாக போராட்டங் கள் நடந்து வருகின்றன. தலித் அமைப்புகள் சார்பில் நேற்றுமுன்தினம் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் நேற்றும் மாநிலத் தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்தன. அரசியல் கட்சிகளின் தலைவர் கள் பலர் பாதிக்கப்பட்ட இளைஞர் கள் மற்றும் அவர்களின் குடும்பத் தினரை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உனா நகரில் உள்ள சமதியாலா பகுதிக்குச் சென்றார். அங்கு தாக்குதலுக்கு ஆளான 4 இளைஞர்களின் தந்தையான பாபுபாய் சர்வையா என்பவரை ராகுல் சந்தித்தார். சுமார் 40 நிமிடங்கள் அவரது குடும்பத்துடன் செலவிட்டார்.

சர்வையா குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்த ராகுல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க இயன்ற அனைத்து முயற்சிகளும் செய்வதாக உறுதி அளித்தார்.

ராகுல் பின்னர் ராஜ்கோட் நகருக்கு சென்றார். இங்குள்ள மருத்துவமனையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான போராட் டத்தில் தற்கொலை முயன்ற இளைஞர்கள் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களையும் ராகுல் சந்தித்தார்.

இதனிடையே உனா சம்பவத்தில் 4 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுலா

6 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்