கட்டாய அரசு விடுமுறைப் பட்டியலில் தசராவுக்குப் பதிலாக பொங்கல் சேர்ப்பு

By செய்திப்பிரிவு

கட்டாய அரசு விடுமுறைப் பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜன.9-ம் தேதி மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பொங்கல் பண்டிகையை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

அதன்படி அரசு அலுவலகங்களில் பொங்கலுக்கு கட்டாய விடுமுறை அளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் முன்அனுமதி பெற்றே விடுமுறை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கட்டாய அரசு விடுமுறைப் பட்டியலில் பொங்கல் பண்டிகையை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பொங்கல் பண்டிகை கட்டாய விடுமுறையை ரத்து செய்ததை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து விருப்ப விடுமுறைப் பட்டியலில் இருந்த பொங்கல் கட்டாய விடுமுறைப் பட்டியலில் தசரா பண்டிகைக்குப் பதிலாக பொங்கல் மீண்டும் சேர்க்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்