ஜம்மு காஷ்மீர் முதல்கட்ட தேர்தல் அறிவிக்கை வெளியீடு

By செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதல்கட்ட தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

ஜம்மு காஷ்மீரில் முதல்கட் டமாக 15 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பண்டிப்போரா, கந்தர்பால், லடாக் பகுதியில் கார்கில், லே, ஜம்மு பகுதியில் கிஸ்துவார், தோடா, ராம்பன் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உமங் நருலா முதல்கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதன்படி வேட்பாளர்கள் நவம்பர் 5-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை 7-ம் தேதி நடக்கிறது. வேட்புமனு வாபஸ்பெற 10-ம் தேதி இறுதி நாளாகும். அனைத்து கட்ட வாக்குப் பதிவுக்குப் பின் டிசம்பர் 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்