கைரானாவில் இந்து மகாசபை நிர்வாகிகள் 6 பேர் கைது

By பிடிஐ

மேற்கு உ.பி.யின் ஷாம்லி மாவட்டம், கைரானா நகரில் தடை உத்தரவை மீறியதாக அகில பாரதிய இந்து மகாசபை நிர்வாகி கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைரானா நகரில் இருந்து இந்துக்கள் வெளியேறியதாக எழுந்துள்ள புகார் குறித்து நேரில் அறிவதற்காக இந்து மகாசபை யின் தேசிய பொதுச் செயலாளர் பூஜா ஷகுன் பாண்டே, மாநிலத் தலைவர் ஞானேந்திரபால், மாநில துணைத் தலைவர் சச்சின் ஷர்மா, அலிகர் மண்டல தலைவர் ஜாவீர் சிங் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் அங்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் தடை உத்தரவை மீறி அங்கு சென்றதாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜய் பூஷன் தெரிவித்தார். பின்னர் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் விடு விக்கப்பட்டனர்.

கிரிமினல்களுக்கு பயந்து கைரானா நகரிலிருந்து பல இந்து குடும்பங்கள் வெளியேறியதாக கூறப்படுவது குறித்து உத்தரப் பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த 10-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் அதிகாரிகள் குழுவை கைரானா அனுப்பி, 2 வாரங் களுக்குள் அறிக்கையை அளிக்கு மாறு மாநில டி.ஐ.ஜி.க்கு (புலனாய்வு) மனித உரிமை ஆணையம் கடந்த 13-ம் தேதி உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

6 hours ago

மேலும்