கறுப்புப் பணம் பதுக்கல்காரர் விவரங்களை சுவிட்சர்லாந்திடம் கேட்கிறது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

சுவிட்சர்லாந்தில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் விவரங்களை அந்த நாட்டு அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.

கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள 10 பேர் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சுவிஸ் வங்கியை மத்திய அரசு அணுகியுள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டு டெக்ஸ்டைல் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களும் அடங்கும்.

சுவிட்சர்லாந்து சட்டப்படி, முதலீட்டாளர்களின் விவரங்களை மற்ற நாடுகளுக்கு வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும். அதன்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு சுவிட்சர்லாந்து வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. வரி குற்றத்தில் சிக்கிய நபர்களின் விவரங்களை மற்ற நாடுகளுக்கு அளிப்பதற்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு இதுவாகும். சம்பந்தப்பட்ட வங்கியையோ அல்லது வரித்துறையையோ அணுகவில்லையெனில் இந்த பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படும். இந்த நடை முறைகள் முடிந்த பிறகு இந்திய அதிகாரிகளிடம் தகவல்கள் வழங்கப்படும்.

இந்த நோட்டீஸ் நியோ கார்ப்பரேஷன் இன்டர்நேஷனல் மற்றும் எஸ்இஎல் என இரண்டு பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இவை மட்டுமல்லாமல் இன்னும் சில நிறுவனங்கள் பனாமா மற்றும் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளைச் சேர்ந்தவை என கூறப்பட்டுள்ளன.

பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கார்ப்பெட் தொழிலில் உள்ளவர்கள். இதில் சிலரது பெயர்கள் `பனாமா பேப்பர்ஸ்’ விவகாரத்திலும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்