உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் தற்போது தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

By இரா.வினோத்

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந் தாலும், தற்போது தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘கர்நாடக அரசு தமிழகத்துக்கு இரு தினங்களுக்கு நொடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும்''என உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே முதல்வர் சித்தராமையா நேற்று மாலை பீதரில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய நீர்வளத் துறை பாசனத்தைவிட, குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. கர்நாடகாவில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற் போது தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகலை முழுமையாகப் படிக்கவில்லை. தீர்ப்பு குறித்த விவரங்களைப் படித்து தெரிந்துகொண்ட பின்னரே கர்நாடக அரசின் முடிவு அறிவிக் கப்படும். கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சித்தராமையாவிடமும், சட்ட நிபுணர் களிடமும் விரிவாக ஆலோசிக்கப்படும். தமிழகத்துக்கு காவிரி நீரை திறப்பது தொடர்பாக சித்தராமையாவே இறுதிமுடிவை எடுப்பார்''என்றார்.

இன்று அமைச்சரவைக் கூட்டம்

கர்நாடக முதல்வர் சித்த ராமையா உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக அவசர அமைச்சரவையை இன்று கூட்டுகிறார். இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து த‌மிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடலாமா? அல்லது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமா என விவாதிக்கப்படும் என தெரிகிறது.

பாஜக பங்கேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக சித்தராமையா இன்று கர்நாடக அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த முறை அனைத்துக்கட்சி கூட்டத் தைப் புறக்கணித்த பாஜக, இம் முறை பங்கேற்கும் என கர்நாடக பாஜகவின் தலைவர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் தமிழகத் துக்குக் காவிரி நீரைத் திறந்து விடுவது தொடர்பாக சித்த ராமையா அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ஆலோசிப்பார். அப்போது நிறைவேற்றப்படும் தீர்மானத்தின்படி சித்தராமையா முடிவெடுப்பார் என தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்