வெள்ளத்தால் பாதித்த மாநிலங்களுக்கு உதவி: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

By பிடிஐ

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

வட மாநிலங்களில் பருவமழை தீவிரவமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக, மேற்கு வங்கம், பிஹார் மாநிலங்களில் ஓடும் கங்கை நதியில் வெள்ளம் அபாயகட்டத்துக்கு மேல் பாய் கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஓடும் யமுனா நதியிலும் வெள்ளம் கரைபுரள்கிறது.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிலைமையை உன் னிப்பாக கவனித்து வருகிறார். குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பிஹார், உத்தராகண்ட், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிதேசம் ஆகிய மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவா ரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவி களையும் மத்திய அரசு செய்யும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அதிலிருந்து விரைவில் மீள பிரார்த்தனை செய்கிறேன். அப் பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் ஆலோசனை

உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், ஹரிஷ் ராவத் (உத்தராகண்ட்), நிதிஷ் குமார் (பிஹார்) வசுந்தரா ராஜே (ராஜஸ் தான்) ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது வெள்ள பாதிப்பு குறித்தும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணி களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

26,400 பேர் மீட்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட் டுள்ள மாநிலங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) சார்பில் 56 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து என்டிஆர்எப் வெளியிட்ட அறிக்கையில், “நடப்பு பருவமழை காலத்தில் இதுவரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய 26,400 பேரை என்டிஆர்எப் குழு மீட்டுள்ளது. மேலும் 9,100 பேருக்கு மருத்துவ உதவியையும் இக்குழுவினர் செய்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 mins ago

சுற்றுலா

15 mins ago

தமிழகம்

46 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்