போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: மசோதா விரைவில் அறிமுகம்

By ஆர்.ஷபிமுன்னா

குடி போதையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. இதற்கான மசோதாவை நடப்பு மழைக்காலக் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, அமெரிக்காவில் ஒருவார கால சுற்றுப்பயணத்துக்குப் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார். அவர் தனது பயணத்தில் அமெரிக்காவில் சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை நேரில் கண்டு வந்துள்ளார். இந்த அனுபவத்தின் அடிப்படையில் நம் நாட்டிலும் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக கடுமையான விதிமுறைகளுடன் கூடிய புதிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கு தண்டனை மற்றும் அபராதம் படிப்படியாக கடுமையாக்கப்பட்டுள்ளது. இதில் முதல்முறை பிடிபடுவோருக்கு ரூ.2,000 அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை, இரண்டாவது முறையாக சிக்குபவர்களுக்கு ரூ.3,000 அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை, மூன்றாவது முறையாக பிடிபடுவோருக்கு 10 ஆயிரம் அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் அபராதம், சிறை தண்டனை ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படவும் இடமுள்ளது.

இதுபோல் அதிவேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறையாக ரூ. 400, இரண்டாவது முறையாக ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மற்றும் பெல்ட் அணியாமல் இலகு ரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவோருக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவது முறை ரூ.300 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

ஓட்டுநர் உரிமம் பெறாத சிறார்கள் வாகனம் ஓட்டினால் அதற்கு அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். சிறார்களை குற்றம் செய்யத் தூண்டியதாக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இத்துடன் குற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமமும் ரத்து செய்யப்படும். இந்த புதிய விதிமுறைகள், அனைத்து மாநிலஅரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தயாரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

16 mins ago

சுற்றுச்சூழல்

44 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்