ராணுவ விவகாரங்களை அரசியலாக்கக் கூடாது: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

By பிடிஐ

ராணுவ வீரர்கள் மீது காஷ்மீரில் கல்லெறி சம்பவம் குறித்து ராணுவ தளபதி பிபின் ராவத் விடுத்த எச்சரிக்கையை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

“எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அரசியலாக்கக் கூடாது. அதே போல்தான் இவர்கள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து சந்தேகங்களை எழுப்பினர். தற்போது செய்யக்கூடாத ஒன்றான ராணுவத் தளபதி எச்சரிக்கையை அவதூறு செய்து அரசியலாக்குகின்றனர்” என்றார்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ வீரர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர்கள் மீது மக்கள் கல்லெறிந்தனர், இதனை பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் பலியாகினர்.

இதனையடுத்து கல்லெறி வீச்சு நடந்தால் தேச விரோத நடவடிக்கை பாயும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்தார். இதனை தேசிய மாநாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வந்தன.

இந்நிலையில்தான் பிரகாஷ் ஜவடேகர் ராணுவ முடிவுகள் மீது சேற்றை வாரி இறைப்பது கூடாது, எதிர்க்கட்சிகள் ஜனநாயக நடைமுறைகளை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்