பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கேஜ்ரிவால் எதிர்ப்பது ஏன்?- பரபரப்பு காரணம் கூறும் கபில் மிஸ்ரா

By பிடிஐ

தனது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படும் என்பதாலேயே பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கேஜ்ரிவால் எதிர்த்தார் என்று ஆம் ஆத்மியின் முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா அண்மையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கேஜ்ரிவால் மீது அவ்வப்போது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கபில் மிஸ்ரா, "ஆம் ஆத்மி கட்சிக்கு ஷெல் கம்பெனிகள் மூலம் பணம் பெறப்பட்டது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தனது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படும் என்பதாலேயே பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கேஜ்ரிவால் எதிர்த்தார்.

கறுப்புப் பணத்தை பதுக்கிய அவரது சகாக்கள் சோதனைகளுக்கு உள்ளானதன் காரணமாகவே அந்த நடவடிக்கையை அவர் எதிர்த்தார். 2013-ல் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் குமாருக்கு வாட் வரி செலுத்தாதற்காக மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்பின்னர் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. அப்போது முகேஷ் குமார் ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்தார். இதனையடுத்து அவர் மீது கேஜ்ரிவால் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு கேஜ்ரிவாலும், மனிஷ் சிசோதியாவும்தான் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்