பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறிய ராகுல் காந்தி

By பிடிஐ

மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ராகுல், பிரதமர் நரேந்திர மோடியை பாஜக எதிர்க்கட்சித் தலைவர் என்று குறிப்பிட்டார்.

சில தினங்களுக்கு முன்னர், "கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யவில்ல. நாட்டிற்காக என்ன செய்தார்கள் என்று அவர்களால் பட்டியல் இட முடியுமா?" என்று பிரதமர் நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தின்போது கூறினார்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை மகாத் பகுதியில் இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடியை எதிர்க்கட்சித் தலைவர் என்று தவறுதலாக குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் பேசும்போது, "கடந்த 60 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நாட்டின் நிலைமையை அவர் ஒருவரே தூக்கி நிறுத்தப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது தேசத்துக்காக உழைத்த அம்பேத்கர், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், நேரு ஆகியோரின் தியாகங்களை என்ன செய்வது? நாட்டின் வளர்ச்சிக்கு மக்களாகிய நீங்களும் உங்களது முன்னோர்களும் தான் காரணம்.

உங்களது வியர்வையும், ரத்தமும் தான் இந்த நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு காரணம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்