தேசிய கீதம், தேசிய பாடலுக்கான வரலாற்று உண்மைகளை கண்டறியுங்கள்: மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் உத்தரவு

By பிடிஐ

‘‘ஜன கண மன’’ பாடல் தேசிய கீதமாகவும், ‘‘வந்தே மாதரம்’’ தேசிய பாடலாகவும் தேர்வு செய் யப்பட்டதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன கண மன தேசிய கீதமாக தேர்வு செய் யப்பட்டிருந்தால் அதுகுறித்து சான்றளிக்க கோரி ஹரிந்தர் திங்ரா என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், ‘‘இந்த கேள்வி பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புடையது அல்ல’’ என்று கூறி பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மத்திய தகவல் ஆணையத்தில் திங்ரா மேல்முறையீடு செய்தார். இந்த மனு குறித்து தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலூ கூறியிருப்பதாவது:

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் தேசிய விவ காரங்கள் தொடர்பான மனுக்களுக்கு தகுந்த பதில்கள் அளிக்காமல் தகவல் அதிகாரிகள் வேறு வேறு துறைகளுக்கு மாற்றிவிடுவது ஆச்சரியம் அளிக்கிறது. மனுக்கள் மீது கவனம் செலுத்தாமல் வேறு துறைகளுக்கு அனுப்புவது, பொறுப்பை தட்டிக் கழிப்பதற்கு நிகரானது. மனுதாரருக்கு பதில் அளிக்காமல் மவுனமாக இருப்பது, ஜன கண மன பாடல் குறித்த தகவல்கள், ஆவணங்கள் மத்திய அரசிடம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

மனுதாரரின் ஆர்டிஐ கேள்வி குறித்து மத்திய அரசு வரலாற்று ஆவணங்களைத் தீவிர ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறிய புதிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். மனுதாரரின் கேள்விக்கு ஆதாரப்பூர்வமான பதிலை அளிக்க வேண்டும். அதன்மூலம் மக்களிடம் ஜன கண மன பாடல் குறித்து உள்ள தவறான கருத்துகளை மத்திய அரசு அகற்ற வேண்டும்.

தேசிய கீதம் ஜன கண மன இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை செய்யாதவர் களை தண்டிப்பதற்கு முன்னர், அந்தப் பாடல் குறித்த வரலாற்று உண்மைகள், பெருமைகளை மக்கள் அறிய செய்ய வேண்டும்.

இவ்வாறு தகவல் ஆணையர் தர் ஆச்சார்யலூ உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்