சென்னையில் பெட்ரோல் விலை 99 பைசா குறைப்பு

By செய்திப்பிரிவு

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 பைசா குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பு திங்கள்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. அதேநேரத்தில், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது.

இதன் பயனாக பெட்ரோல் விலை, நாடு முழுவதும் லிட்டருக்கு 75 பைசா குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன.

இந்த விலைக் குறைப்பு, உள்ளூர் வரி மற்றும் வாட் வரிக்கு ஏற்ப அந்தப் பகுதிகளில் அமலுக்கு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு 99 பைசா குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.76.48-ல் இருந்து ரூ.75.49 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.









VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

8 mins ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

59 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்